தொழிலாளி தற்கொலை

தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-09-25 19:46 GMT

நெல்லை பேட்டை செக்கடி நெல்லையாபுரத்தைச் சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 30). கூலி தொழிலாளியான இவருக்கு சுமதி என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். நேற்று முன்தினம் கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

நேற்று காலை வெகு நேரமாகியும் அய்யப்பன் எழும்பாததால் சந்தேகம் அடைந்த சுமதி கதவை தட்டிப் பார்த்தார். ஆனால் திறக்காததால் ஜன்னல் கதவின் கண்ணாடியை உடைத்து பார்த்தபோது அய்யப்பன் தூக்கில் பிணமாக தொங்கினார். தகவல் அறிந்ததும் பேட்டை போலீசார் அவரது உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்