தொழிலாளி தற்கொலை

களக்காடு அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-08-15 19:26 GMT

களக்காடு:

களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரம் முத்துநகர் புதுக்குடியிருப்பை சேர்ந்தவர் வெற்றிவேல் (வயது 32). கட்டிட தொழிலாளியான இவர் கட்டிட தொழிலுக்காக குழுவின் ரூ.2 லட்சம் கடன் பெற்று மரப்பலகைகள் வாங்கினார். ஆனால் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் தவித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டை விட்டு சென்ற வெற்றிவேல், சிதம்பரபுரம் பஸ்நிறுத்தம் அருகே விஷம் குடித்து இறந்து கிடந்தார். இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் வேலம்மாள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். தற்கொலை செய்து கொண்ட வெற்றிவேலுக்கு, மரகதநேசமணி (32) என்ற மனைவியும், 2 ஆண் குழந்தைகளும் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்