தொழிலாளிக்கு கத்திக்குத்து

தொழிலாளிக்கு கத்திக்குத்து

Update: 2022-08-22 16:56 GMT

சாயல்குடி

சாயல்குடி அருகே பூப்பாண்டியபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பொன் குருசாமி (வயது 60). தொழிலாளி. இவருக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த லிங்கேஸ்வரன்(26) என்பவருக்கும் முன்விரோதம் இருந்தது. இருசக்கர வாகனத்தில் பொன் குருசாமி கிழக்கு கடற்கரை சாலையில் வரும்போது, சண்முக குமாரபுரம் பஸ் நிறுத்தம் அருகே லிங்கேஸ்வரன், அவரது உறவினர் அருண்குமார்(23), பொன்குமார்(22) ஆகியோர் வழிமறித்தனர். மேலும் பொன் குருசாமியை கீழே தள்ளிவிட்டு கத்தியால் லிங்கேஸ்வரன் குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் சாயல்குடி இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா, சப்-இன்ஸ்பெக்டர் சல்மோன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்