தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை

தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை

Update: 2022-08-16 18:17 GMT

தாமரைக்குளம்:

பலாத்காரம்

அரியலூர் அண்ணாநகர் காமராஜர் தெருவை சேர்ந்தவர் கார்த்திக்(வயது 27). சுமை தூக்கும் தொழிலாளியான இவர், 16 வயதுடைய பிளஸ்-1 மாணவியிடம் கடந்த 14.4.2021 அன்று இரவு திருமணம் செய்து கொள்வதாக கூறி சான்றிதழ்கள் மற்றும் உடைகளை எடுத்து வருமாறு கூறியுள்ளார். அதனை நம்பி மாணவியும் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

இது பற்றி மாணவியின் தந்தை, 15.4.21 அன்று அரியலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திகை கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் அவர் ஏற்கனவே, திருமணம் செய்து கொள்வதாக கூறி அழைத்து சென்று மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

சிறை தண்டனை

இது குறித்த வழக்கு விசாரணை, அரியலூர் மகளிர் விரைவு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி ஆனந்தன் நேற்று தீர்ப்பு கூறினார்.

அதில், குற்றவாளி கார்த்திக்கிற்கு உடலுறவு கொண்டதற்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், கடத்தி சென்றதற்காக 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இதையடுத்து கார்த்திக்கை பலத்த பாதுகாப்புடன் சிறையில் அடைக்க போலீசார் அழைத்து சென்றனர்.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவி கடந்த மார்ச் மாதம் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்