பழனி அருகே உள்ள பாப்பம்பட்டியை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 35). கூலித்தொழிலாளி. இவர் நேற்று வேலை தொடர்பாக மோட்டார் சைக்கிளில் பழனிக்கு வந்தார். பின்னர் அங்கிருந்து மீண்டும் தனது ஊருக்கு சென்று கொண்டிருந்தார். பழனி-கொழுமம் சாலையில் பாப்பம்பட்டி பிரிவு அருகே அவர் வந்தபோது, அவ்வழியாக வந்த வாகனம் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில், மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட முருகானந்தம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பழனி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.