கிருஷ்ணகிரி அருகே கார் மோதி தொழிலாளி பலி

Update: 2023-06-06 20:00 GMT

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அருகே உள்ள வேட்டியம்பட்டியை சேர்ந்தவர் மணிகுமார் (வயது 32). கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் வேட்டியம்பட்டி அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற கார் அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த மணிகுமார் சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் கிருஷ்ணகிரி டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்