காரியாபட்டி அருகே தொழிலாளி கொலை
காரியாபட்டி அருகே தொழிலாளி கொலை செய்யப்பட்டார்.
காரியாபட்டி,
காரியாபட்டி தாலுகா வெற்றிலை முருகன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாயகிருஷ்ணன் (வயது 50). கூலி ெதாழிலாளி. இவர் தனது வீட்டின் முன்பு சாப்பிட்டு கொண்டிருந்ததாகவும், அப்போது மற்றொரு தரப்பை சேர்ந்த சண்முக நாராயணன் (எ) சதாசிவம் (50), சீமான் (61) சதீஸ் (25) மற்றும் சிலர் மாயகிருஷ்ணனை கம்பால் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த மாயகிருஷ்ணனை, அவரது குடும்பத்தினர் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாயகிருஷ்ணன் இறந்தார். இதுகுறித்து காரியாபட்டி போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து இந்த கொலை வழக்கில் தொடர்புடையதாக மருதங்குடியை சேர்ந்த மாரிச்சாமி (43) என்பவரை கைது செய்தனர்.