வேன் மோதி தொழிலாளி பலி

வேன் மோதி தொழிலாளி பலி;

Update: 2022-07-21 14:49 GMT

கீழ்பென்னாத்தூர் தாலுகா கரிக்கலாம்பாடி பகுதியை சேர்ந்தவர் அண்ணாதுரை (வயது 38), கூலி தொழிலாளி.

இவர் சம்பவத்தன்று திருவண்ணாமலை -செங்கம் சாலையில் உள்ள ஞானஒலி நகரில் வேலை செய்து முடித்து விட்டு வீட்டிற்கு செல்ல புறப்பட்டார்.

அவர் அந்த பகுதியில் சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த வேன் அண்ணாதுரை மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த திருவண்ணாமலை தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து அண்ணாதுரையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்