இருசக்கர வாகனம் மோதி தொழிலாளி சாவு

டி.கல்லுப்பட்டி அருகே இருசக்கர வாகனம் மோதி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.;

Update: 2022-09-04 20:21 GMT

பேரையூர்,

டி.கல்லுப்பட்டி அருகே உள்ள ஜாரி உசிலம்பட்டியை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 52). கூலி தொழிலாளி.. சம்பவத்தன்று கருப்பசாமி, கோபாலசாமி கோவில் விலக்கு அருகே உள்ள டீக்கடையில் டீ குடித்தார். பின்னர் அங்கிருந்து வீட்டுக்கு செல்வதற்காக மதுரை- ராஜபாளையம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த இருசக்கர வாகனம் ஒன்று கருப்பசாமி மீது மோதியது. இதில் காயம் அடைந்த அவரை .சிகிச்சைக்காக பேரையூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர், வரும் வழியிலேயே கருப்பசாமி இறந்து விட்டார் என்று கூறினார். இது குறித்து டி.கல்லுப்பட்டி போலீசார், இருசக்கர வாகனம் ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்திய சென்னை தாம்பரத்தை சேர்ந்த பரத் (23) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்