சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் ஆண் பிணம் கிடப்பதாக ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் இறந்து கிடந்தவர் மகுடஞ்சாவடி காளிகவுண்டன்பாளையத்தை சேர்ந்த சண்முகம் (வயது 50) என்பதும், தொழிலாளியான அவர் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது அந்த வழியாக வந்த ரெயில் மோதி இறந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சண்முகத்தின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்கள்.