ரோடு ரோலர் மோதி தொழிலாளி பலி

ரோடு ரோலர் மோதி தொழிலாளி பலியானார்.;

Update: 2022-09-12 18:47 GMT


ரோடு ரோலர் மோதி தொழிலாளி பலியானார்.

ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கத்தை அடுத்த கடப்பேரி அருகே உள்ள ராமாபுரம் காலனியை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 57). இவர், கூலிக்கு ஆட்களை அழைத்து வந்து வேலை செய்யும் தொழிலை செய்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று ராணிப்பேட்டை அருகே உள்ள மாந்தாங்கல் மோட்டூர் பகுதியில் ரோடு வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த ரோடு ரோலர் திடீரென சாலையில் வேலை செய்து கொண்டிருந்த மகேந்திரன் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ராணிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்