மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி சாவு
போடியில் தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி ஒருவர் பலியானார்.;
போடி ஜமீன் தோப்பு தெருவை சேர்ந்தவர் காமராஜ் (வயது 36). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 5-ந்தேதி கீழத்தெருவை சேர்ந்த கருப்பையா (34) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் தேனி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது சாலை காளியம்மன் கோவில் அருகே சாலையின் மையப்பகுதியில் இருந்த தடுப்பு சுவரில் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக போடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் காமராஜ் மேல் சிகிச்சைக்கு தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் காமராஜ் உயிரிழந்தார். இதுகுறித்து போடி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.