மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலி
ரிஷிவந்தியம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலி
ரிஷிவந்தியம்
ரிஷிவந்தியம் ஒன்றியத்துக்குட்பட்ட பெரிய கொள்ளியூர் காலனியை சேர்ந்தவர் தனக்கோட்டி(வயது 47). கரும்பு வெட்டும் தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் இரவு பெரிய கொள்ளியூர் மதுபான கடை அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த தனிக்கோட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மோட்டார் சைக்கிளை ஒட்டி வந்த பாக்கம் கிராமத்தைச சேர்ந்த குப்பன் மகன் ஆனந்தராஜ் படுகாயங்களுடன் கள்ளக்குறிச்சி தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைபெற்று வருகிறார். இந்த விபத்து குறித்த புகாரின் பேரில் பகண்டை கூட்டுரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.