கார் மோதி தொழிலாளி பலி

ஏர்வாடி அருகே கார் மோதி தொழிலாளி பலியானார்.;

Update: 2023-05-29 20:13 GMT

ஏர்வாடி:

நெல்லை வண்ணார்பேட்டையை சேர்ந்தவர் அரவிந்த். இவர் நேற்று தனது குடும்பத்தினருடன் காரில் கோவளம் மற்றும் கன்னியாகுமரிக்கு சுற்றுலா சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார். ஏர்வாடி அருகே உள்ள தளபதிசமுத்திரம் நான்கு வழிச்சாலையில் கார் வந்தபோது ரோட்டின் குறுக்கே மோட்டார் சைக்கிள் ஒன்று வந்தது. இதனால் திடீர் என எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த அணைக்கரையை சேர்ந்த தொழிலாளி கார்த்திக் (வயது 28) தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஏர்வாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவர் நெல்லையை சேர்ந்த சதீஷ் என்பவரிடம் விசாரனை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்