கார் மோதி தொழிலாளி பலி

கார் மோதி தொழிலாளி பலியானார்.

Update: 2023-05-22 18:47 GMT

கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள கணக்கம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 56). ெதாழிலாளியான இவர், தனது மோட்டார் சைக்கிளில் மாயனூர் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே சென்று கொண்டிருந்தார்.

அப்போது, கோயம்புத்தூர் பீளமேடு பகுதியை சேர்ந்த சிவராம் (36) என்பவர் ஓட்டி வந்த கார் பெருமாள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில், படுகாயம் அடைந்த பெருமாளை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு பெருமாளை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து பெருமாளின் உறவினர் ராஜசேகர் கொடுத்த புகாரின் பேரில் மாயனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்