கார் மோதி தொழிலாளி சாவு
திருவெண்ணெய்நல்லூர் அருகே கார் மோதி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
திருவெண்ணெய்நல்லூர்
திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள அரசூர் பாரதிநகரை சேர்ந்தவர் கண்ணன்(வயது 56). தொழிலாளியான இவர் சம்பவத்தன்று திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அரசூர் பாவாடைராயன் கோவில் முன்பு தனது சைக்கிளை தள்ளிக்கொண்டு போகும் போது திருச்சியில் இருந்து சென்னை நோக்கி வந்த கார் கண்ணன் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கண்ணன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.