கார் மோதி தொழிலாளி பலி

கார் மோதி தொழிலாளி பலியானார்.;

Update: 2023-09-08 18:47 GMT

காரைக்குடி

கல்லல் தமிழர் தெருவை சேர்ந்தவர் மதுரைவீரன் (வயது 53). இவர் கோட்டையூர் பேரூராட்சியில் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று தேவகோட்டையில் உள்ள தனது தங்கையை பார்ப்பதற்காக மொபட்டில் சென்றார். தங்கையை பார்த்து விட்டு. இரவு 10 மணி அளவில் தேவகோட்டையிலிருந்து கோட்டையூர் நோக்கி வந்து கொண்டிருந்தார்.

ேகாட்டையூருக்கும் -புதுவயலுக்கு இடையே செல்லும் போது எதிரே கோட்டையூரில் இருந்து புதுவயலை நோக்கி வந்த கார், மொபட் மீது மோதியது.இதில் மதுரை வீரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இதுகுறித்து பள்ளத்தூர் போலீசார் காரை ஓட்டி வந்த காரைக்குடி கீழத்தெருவை சேர்ந்த முத்துக்கருப்பன் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்