கார் மோதி தொழிலாளி பலி

கொடைரோடு அருகே கார் மோதியதில் தொழிலாளி பலியானார்.

Update: 2023-09-04 23:45 GMT

கொடைரோடு அருகே உள்ள ஜெ.ஊத்துப்பட்டியை சேர்ந்தவர் ராஜ் (வயது 73). கூலித்தொழிலாளி. நேற்று இவர், திண்டுக்கல்-மதுரை நான்கு வழி சாலையில் ஜெ.ஊத்துப்பட்டி பிரிவு அருகே சாலையை கடக்க முயன்றார். அப்போது திண்டுக்கல்லில் இருந்து மதுரை நோக்கி வந்த கார் அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர் ராஜ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து அம்மையநாயக்கனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கருப்பையா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்