கார் மோதி தொழிலாளி பலி
சாலையை கடக்க முயன்றபோது கார் மோதியதில் தொழிலாளி பலியானார்.
பழனி அருகே உள்ள சாமிநாதபுரத்தை சேர்ந்தவர் ராமசாமி (வயது 52). கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் இவர், சாமிநாதபுரம் பகுதியில் உடுமலை சாலையை கடக்க முயன்றார். அப்போது கோவையில் இருந்து மதுரை நோக்கி வந்த கார் எதிர்பாராதவிதமாக ராமசாமி மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று ராமசாமி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சாமிநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.