ரெயிலில் அடிபட்டு தொழிலாளி பலி

கல்லல் ரெயில்வே கேட் அருகில் ரெயிலில் அடிபட்டு தொழிலாளி உயிரிழந்தார்.

Update: 2023-09-07 05:14 GMT

காரைக்குடி,

கல்லல் ரெயில்வே கேட் அருகில் ரெயிலில் அடிபட்டு உடல் சிதைந்த நிலையில் ஒருவரின் பிணம் கிடந்தது. இது குறித்த தகவல் அறிந்த காரைக்குடிரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சவுதாமா சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். பின்னர் நடந்த விசாரணையில் இறந்தவர் எழுமாப்பட்டியை சேர்ந்த தொழிலாளி முருகன் (வயது 52) என்பதும், அதிகாலையில் ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரெயிலில் அடிபட்டு இறந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இது குறித்து காரைக்குடி ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்