கல்லால் தாக்கி தொழிலாளி படுகொலை

லத்தேரி அருகே தூங்கிக்கொண்டிருந்த தொழிலாளி கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டார்.

Update: 2023-04-26 19:14 GMT

தொழிலாளி

கே.வி.குப்பம் தாலுகா லத்தேரியை அடுத்த மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வம் (வயது 62). தேங்காய் நார் உரிக்கும் தொழிலாளி. இவருக்கு ஹேமாவதி என்ற மனைவி, ஜெயலட்சுமி என்ற மகளும், தில்லி பாபு என்ற மகனும் உள்ளனர். ஜெயலட்சுமிக்கு திருமணமாகி விட்டது.

செல்வம் தனது மனைவி, மகனை பிரிந்து மகள் ஜெயலட்சுமி வீட்டில் கடந்த 2 ஆண்டுகளாக வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு வெளியே தூங்கிக் கொண்டிருந்தார்.

கல்லால் தாக்கி கொலை

இந்த நிலையில் நேற்று காலையில் பார்த்தபோது செல்வம் படுத்திருந்த இடத்தில் ரத்தக்காயங்களுடன் பிணமாக கிடந்தார். அருகில் ரத்தக் கரைகளுடன் ஒரு கருங்கல் கிடந்தது. அவரை யாரோ கல்லால் தாக்கி படுகொலை செய்துள்ளனர்.

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ஜெயலட்சுமி, லத்தேரி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர் உடலை கைப்பற்றி, பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அவரை யார் கொலை செய்தார்கள், எதற்காக கொலை செய்தனர். என்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்து லத்தேரி போலீசார் வழக்குப்பதிவுசெய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்