மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியானாா்.

Update: 2023-01-18 18:54 GMT

சிவகாசி, 

சிவகாசி அருகே உள்ள அனுப்பன்குளம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பழனி சுப்பு. இவரது மகன் கண்ணன் (வயது 35). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தீப்பெட்டி ஆலையில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று காலை பணியில் இருந்த போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் மயங்கி விழுந்த அவரை அருகில் இருந்த சக தொழிலாளர்கள் மீட்டு, சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர், கண்ணன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து அவரது தாயார் பழனிசுப்பு கொடுத்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்


Tags:    

மேலும் செய்திகள்