செஞ்சி அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி கோவில் திருவிழாவுக்கு கொடிக்கம்பம் நட்டபோது பரிதாபம்

செஞ்சி அருகே கோவில் திருவிழாவுக்கு கொடிக்கம்பம் நட்டபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.;

Update: 2022-08-10 16:51 GMT

செஞ்சி, 

செஞ்சி அருகே மேல்களவாய் கிராமத்தில் உள்ள அய்யனாரப்பன் கோவில் திருவிழா இன்று மாலை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு காலையில் தோரணங்கள் கட்டும் பணி மற்றும் கொடிக்கம்பங்கள் நடும் பணியில் கூலி தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அந்த சமயத்தில் கூலி தொழிலாளியான அதேஊரை சேர்ந்த சீனிவாசன் மகன் அழகேசன்(வயது 29) என்பவர் இரும்பு கொடிக்கம்பம் ஒன்றை நடும் பணியில் ஈடுபட்டார். அப்போது அந்த கொடிக்கம்பம் மேல்பகுதியில் சென்ற மின்கம்பி மீது உரசியது. இதில் கொடிக்கம்பத்தில் மின்சாரம் பாய்ந்ததோடு, கொடிக்கம்பத்தை பிடித்திருந்த அழகேசனை மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்டு மயங்கிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக செஞ்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அழகேசன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் செஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்