தேன்கனிக்கோட்டை:-
கிருஷ்ணகிரி அருகே கிட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்த மது மகன் சத்தியன் (வயது 23). டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. சம்பவத்தன்று இவர், சாரகப்பள்ளியில் தனியார் கோழிப்பண்ணையில் பணியில் இருந்த போது அங்கிருந்த மின்சார கம்பியை எதிர்பாராதவிதமாக பிடித்தார். இதில் மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு் ஓசூர் தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆஸ்பத்திரியில் சத்தியனை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.