மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியானார்.;

Update: 2023-09-05 21:02 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர்,

மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா நரிகுடியை சேர்ந்தவர் பாரதிராஜா (வயது 21). இவர் மைக் செட் போடும் தொழில் செய்து வந்தார். இந்தநிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் வடக்கு குப்பனாபுரம் மந்தை மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற திருவிழாவிற்கு மைக் செட் போடுவதற்காக மின்கம்பத்தில் ஏறி உள்ளார். அப்போது மின்சாரம் தாக்கி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது தந்தை ஆசைத்தம்பி கொடுத்த புகாரின் பேரில் நத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்