மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியானார்;

Update: 2023-08-27 18:45 GMT

காரைக்குடி

கல்லல் அருகே உள்ள கொட்டகுடி பகுதியை சேர்ந்தவர் ரகு (வயது 32). இவர் சென்ட்ரிங் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று காரைக்குடி அசோக் நகரில் உள்ள ஒரு வீட்டில் வேலை பார்த்து கொண்டிருந்தார். அங்கு இரும்பு கம்பியை மேலே தூக்கும்போது அருகே சென்ற உயர் அழுத்த மின்கம்பியில் உரசியதில் அவர் மீது மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு காரைக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரகு பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து காரைக்குடி வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்