லாரி மோதி தொழிலாளி படுகாயம்
அன்னவாசல் அருகே லாரி மோதி தொழிலாளி படுகாயம் அடைந்தார்.
அன்னவாசல் அருகே உள்ள காலாடிப்பட்டி சத்திரத்தை சேர்ந்தவர் ராஜா (வயது 60), கூலி தொழிலாளி. இவர் காலாடிப்பட்டி அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற டிப்பர் லாரி எதிர்பாராதவிதமாக ராஜா மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த ராஜாவை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு திருச்சி மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த விபத்து குறித்து அன்னவாசல் போலீசார் மண்ணவேளாம்பட்டியை சேர்ந்த டிரைவர் சுப்பிரமணியன் (26) மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.