சொக்கப்பனை தீயில் விழுந்து தொழிலாளி காயம்
பாளையங்கோட்டையில் சொக்கப்பனை தீயில் விழுந்து தொழிலாளி காயம் அடைந்தார்.
பாளையங்கோட்டை மனகாவலன்பிள்ளை நகரை சேர்ந்தவர் முருகன் (வயது 50). தொழிலாளியான இவர் நேற்று திருக்கார்த்திகையொட்டி மனக்காவலன்பிள்ளைநகர் பகுதியில் உள்ள காளியம்மன் கோவிலில் சொக்கப்பனை தீ கொளுத்தப்பட்டது. அப்போது திடீரென அந்த தீக்குள் முருகன் நடந்து செல்ல முயன்றார். இதில் கீழே தவறி விழுந்து தீயில் கருகி காயம் அடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் முருகனை மீட்டு பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த பாளையங்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வாசிவம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.