தீயில் கருகி தொழிலாளி காயம்

மின்சாரம் தாக்கியதில் தீயில் கருகி தொழிலாளி காயம் அடைந்தார்

Update: 2022-10-06 18:45 GMT

கடையம்:

கடையம் அருகேயுள்ள கேளையாபிள்ளையூர் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பையா மகன் மகேந்திரன் (வயது 35). இவர் அப்பகுதியில் உள்ள இறைச்சி கடையில் கறி வெட்டும் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவில் டேபிள் மின்விசிறி அருகில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் தாக்கியதில் தீப்பிடித்தது. இதில் பலத்த காயமடைந்த மகேந்திரனை அக்கம்பக்கத்தினர் காப்பாற்றி சிகிச்சைக்காக கடையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து கடையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்