பஸ் மோதி தொழிலாளி படுகாயம்

பஸ் மோதி தொழிலாளி படுகாயம் அடைந்தார்.;

Update: 2022-10-30 19:38 GMT

சிவகாசி, 

சிவகாசி அருகே உள்ள மீனம்பட்டியை சேர்ந்தவர் பால்ராஜ் (வயது 46). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு அச்சகத்தில் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று வேலையை முடித்து விட்டு நடந்து வந்து கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த மினிபஸ் பால்ராஜ் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து மினி பஸ் டிரைவர் கருப்பசாமிபாண்டியன் மீது சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Tags:    

மேலும் செய்திகள்