சாய்ந்த மின்கம்பத்தை சீரமைத்தபோது தடுமாறி விழுந்த ஊழியர் படுகாயம்

சாய்ந்த மின்கம்பத்தை சீரமைத்தபோது தடுமாறி விழுந்த ஊழியர் படுகாயமடைந்தார்.;

Update: 2022-07-08 19:40 GMT

மீன்சுருட்டி:

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ள வெங்கனூர், பாரதி நகரை சேர்ந்தவர் கணபதி. இவருடைய மகன் விக்னேஷ்(வயது 30). இவர் பாப்பாக்குடி மின்வாரியத்தில் வேலை பார்த்து வந்ததாக தெரிகிறது. சம்பவத்தன்று காடுவெட்டி மாரியம்மன் கோவில் அருகே சாய்ந்த மின் கம்பத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டபோது, திடீரென அந்த மின்கம்பம் சாய்ந்து கீழே விழுந்தது. இதனால் நிலைதடுமாறி விழுந்த விக்னேஷ் பலத்த காயமடைந்தார். அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது குறித்து விக்னேஷ் கொடுத்த புகாரின்பேரில் மீன்சுருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜதுரை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

Tags:    

மேலும் செய்திகள்