தேவிகோட்டில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
தேவிகோட்டில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
களியக்காவிளை:
தேவிகோட்டில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பளுகல் காவல் நிலையத்துக்கு உட்பட்ட தேவிகோடு புன்னாக்கரை பகுதியை சேர்ந்தவர் மது (வயது 56), தொழிலாளி, இவருக்கு மனைவி மற்றும் பிள்ளைகள் உண்டு. மதுவுக்கு சமீப காலமாக கண் பார்வை குறைபாடு இருந்து வந்துள்ளது. இதனால் பணிக்கு செல்ல முடியாமல் மன வருத்தத்தில் இருந்து வந்துள்ளார்.
இந்தநிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் அடிப்படையில் பளுகல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.