மணல் சலிக்கும் எந்திரத்தில் சிக்கி தொழிலாளி சாவு
மணல் சலிக்கும் எந்திரத்தில் சிக்கி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
நாமக்கல் மாவட்டம், ஜேடர்பாளையம் அருகே உள்ள கொத்தமங்கலம் அருந்ததியர் தெருபகுதியைச் சேர்ந்தவர் குமாரசாமி (வயது 36). இவர் கரூர் மாவட்டம், நொய்யல் அருகே செயல்பட்டு வரும் தனியாருக்கு சொந்தமான மணல் சலிக்கும் எந்திரத்தில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் எந்திரத்தில் மணல் சலித்து கொண்டிருந்தபோது, அந்த எந்திரத்திற்குள் குமாரசாமி கையை விட்டு விட்டார். இதனால் எந்திரத்தில் சிக்கி அவர் படுகாயம் அடைந்தார்.
இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் படுகாயம் அடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு ெகாண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த சம்பவம் குறித்து குமாரசாமியின் மனைவி மாரியம்மாள் (29) கொடுத்த புகாரின்பேரில், வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.