திண்டுக்கல்லில் கிணற்றில் மூழ்கி தொழிலாளி பலி

திண்டுக்கல்லில் கிணற்றில் மூழ்கி தொழிலாளி பலியானார்.

Update: 2023-02-24 20:30 GMT

திண்டுக்கல் மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் கண்ணன் தீபக் (வயது 38). கூலித்தொழிலாளி. நேற்று இவர், அதே பகுதியில் உள்ள கிணற்றில் குளிப்பதற்காக சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கிய அவர், சிறிது நேரத்தில் மூச்சுத்திணறி பலியானார்.

சம்பவம் குறித்து தகவலறிந்த தெற்கு போலீசார் விரைந்து சென்று கண்ணன் தீபக்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்