ஆற்றில் மூழ்கி தொழிலாளி சாவு

பத்தமடையில் ஆற்றில் மூழ்கி தொழிலாளி இறந்தார்.

Update: 2023-05-31 19:42 GMT

சேரன்மாதேவி:

பத்தமடை குண்டலகேசி தெருவை சேர்ந்தவர் சுப்பையா மகன் ஆறுமுகம் (வயது 47). விவசாய கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணம் முடிந்து பிரேமா (40) என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இந்நிலையில் ஆறுமுகம் நேற்று முன்தினம் மாலை அப்பகுதியில் உள்ள ஒரு உறவினர் இறந்த துக்க நிகழ்ச்சிக்காக தாமிரபரணி ஆற்றுக்கு சென்றுள்ளார். ஈமச்சடங்கு நிகழ்ச்சிகள் முடிந்து உறவினர்கள் அனைவரும் வீடு திரும்பிய நிலையில், ஆறுமுகம் மட்டும் வீட்டிற்கு வரவில்லை. இதையடுத்து நேற்று காலை அவரது உறவினர்கள் ஆறுமுகத்தை தேடிய போது ஆற்றில் தண்ணிரில் மூழ்கிய நிலையில் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த பத்தமடை போலீசார் ஆறுமுகத்தின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக அவரது மனைவி பிரேமா கொடுத்த புகாரின் பேரில் பத்தமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்