நெல் அறுவடை எந்திரத்தை பழுது பார்த்த போது மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு

நெல் அறுவடை எந்திரத்தை பழுது பார்த்தபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியானார்.;

Update:2023-07-19 15:23 IST

திருவள்ளூர் அடுத்த பேரம்பாக்கம் அருகே உள்ள சத்தரை கொள்ளக் காலனியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 27). இவருக்கு மனைவியும், இரண்டு பிள்ளைகளும் உள்ளனர். மணிகண்டன் நெல் அறுவடை எந்திர டிரைவராக பணிபுரிந்து வந்தார்.

நேற்று முன்தினம் அவர் நெல் அறுவடை செய்யும் எந்திரம் பழுது ஏற்பட்டதை தொடர்ந்து பேரம்பாக்கத்திற்கு சென்று அங்கு வெல்டிங் எந்திரத்தை வாங்கிக்கொண்டு பழுதான நெல் அறுவை எந்திரத்தை சரி செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார்.

இதை பார்த்த அங்கு இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக் காக பேரம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே மணிகண்டன் பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து மப்பேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்