தோல் தொழிற்சாலையில் மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு

தோல் தொழிற்சாலையில் மின்சாரம் தாக்கி தொழிலாளி இறந்தார்.

Update: 2023-09-27 18:21 GMT

தோல் தொழிற்சாலையில் மின்சாரம் தாக்கி தொழிலாளி இறந்தார்.

ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் ஐ.ஓ.பி.நகர் ராகவேந்திரா கோவில் தெருவில் வசித்து வந்தவர் சுரேஷ்காந்தி (வயது 45). தோல் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்த இவருக்கு 2 மகள்கள் உள்ளனர்.

நேற்று சுரேஷ்காந்தி வழக்கம் போல பணியில் ஈடுபட்டிருந்த அவர் 'ஏர் ப்ளோயர்' எந்திரத்தை இயக்கியதாக கூறப்படுகிறது. அப்போது திடீரென மின்கசிவு ஏற்பட்டதில் மின்சாரம் தாக்கி கீழே விழுந்துள்ளார்.

அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செனறனர். டாக்டர்கள் பரிசோதித்த போது, சுரேஷ்காந்தி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்