தொழிலாளி மர்ம சாவு; கொலையா? நண்பரிடம் போலீசார் விசாரணை

சிறுகனூர் அருகே தொழிலாளி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது தொடர்பாக அவரது நண்பரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-10-25 19:10 GMT

சிறுகனூர் அருகே தொழிலாளி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது தொடர்பாக அவரது நண்பரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொழிலாளி

சிறுகனூர் அருகே உள்ள இனாம் சமயபுரம் ஆதிமாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் மொட்டையாண்டி. இவரது மகன் முருகவேல் (வயது 24). இவர் மண்ணச்சநல்லூரில் உள்ள ஒரு அரிசி ஆலையில் மூட்டை தூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் குமுளூர் காவேரி என்ற இடம் அருகே ஒரு பட்டாசு கடை பக்கம் முருகவேல் தலையில் காயத்துடன் இறந்து கிடந்தார். தகவல் அறிந்த சிறுகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். சம்பவம் நடைபெற்ற இடத்தை லால்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு சீதாராமன் நேரில் சென்று பார்வையிட்டார்.

நண்பரிடம் விசாரணை

விசாரணையில் முருகவேலும், அவரது நண்பர் இனாம் சமயபுரத்தைச் சேர்ந்த குமார் என்பவரும் சம்பவ நடைபெற்ற இடத்தில் அமர்ந்து மது அருந்தி உள்ளனர். இந்த நிலையில் தான் அவர் இறந்து கிடந்தார். இதனால் குமாரையும் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் முருகவேல் அளவுக்கு அதிகமாக மது அருந்தி உள்ளார். எனவே அவர் போதையில் தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டு இறந்தாரா? அல்லது வேறு யாரேனும் அடித்து கொன்றார்களா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனைக்கு பிறகு தான் இந்த சம்பவத்தின் உண்மை நிலை தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்