கடலூர்
கடலூர் வண்டிக்குப்பத்தை சேர்ந்தவர் நாராயணசாமி மகன் ராஜீவ்காந்தி(வயது 35). தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் மாலை தனது அக்காளிடம் 100 ரூபாய் வாங்கிக் கொண்டு குளிர்பானம் குடித்து விட்டு வருவதாக கூறிச் சென்றவர் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை.
இதனால் அவரது குடும்பத்தினர் ராஜீவ்காந்தியை தேடி பார்த்தனர். அப்போது வண்டிக்குப்பத்தில் உள்ள முருகன் கோவில் பின்புறம் ராஜீவ்காந்தி மயங்கி கிடந்தார். இதை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராஜீவ்காந்தியின் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.