மோட்டார்சைக்கிள் மோதி தொழிலாளி பலி

குடியாத்தம் அருகே மோட்டார்சைக்கிள் மோதி தொழிலாளி பலியானார்.

Update: 2023-09-24 13:42 GMT

குடியாத்தம் தரணம்பேட்டை பெரியப்ப முதலி தெருவை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 57), குடியாத்தம் அடுத்த ராஜாகோயில் கிராமம் அருகே உள்ள தனியார் அலுமினிய தொழிற்சாலையில் வேலைபார்த்து வந்தார். இரவு பணி முடிந்ததும் ராஜாகோயில் பஸ் நிறுத்தம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் குணசேகரன் பலத்த காயமடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து மேல்சிகிச்சிக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி, சப்-இன்ஸ்பெக்டர் தாரணி ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்