மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு

மின்சாரம் தாக்கி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

Update: 2023-06-04 18:56 GMT


விருதுநகர் அருகே உள்ள கோட்டூரை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 53). கட்டிட தொழிலாளியான இவர் வீரார்பட்டி கிராமத்தில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது மின்சாரம் தாக்கியதில் பரிதாபமாக அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுபற்றி அவரது மகன் கண்ணன் கொடுத்த புகாரின் பேரில் அப்பையநாயக்கன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்