மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு

நாங்குநேரி அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-12-27 20:53 GMT

நாங்குநேரி:

நாங்குநேரி அருகே உள்ள பட்டர்புரத்தை சேர்ந்தவர் திருமலை நம்பி (வயது 45). தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த ஒருவரின் வீட்டில் நேற்று காலை மின்விசிறியில் கண்டன்சர் மாற்றும் பணியில் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் நாங்குநேரி போலீசார் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்