மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு

பாளையங்கோட்டையில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-10-07 20:24 GMT

பாளையங்கோட்டை அருகே உள்ள திருமலைக்கொழுந்துபுரம் மணக்காடு வேதக்கோவில் தெருவை சேர்ந்தவர் செல்லத்துரை (வயது 50). கட்டிட தொழிலாளி. இவருக்கு மனைவியும், ஒரு மகன், 2 மகள்களும் உள்ளனர். செல்லத்துரை நேற்று காலை பாளையங்கோட்டை எல்.ஐ.சி. அலுவலகம் அருகே நடந்து வரும் கட்டிட வேலைக்காக சென்றுள்ளார்.

அப்போது கட்டிட வேலைக்காக குவித்து வைக்கப்பட்டிருந்த மண் சரிந்து விழுந்ததால், அதில் நின்று கொண்டிருந்த செல்லத்துரை அருகில் இருந்த கம்பியை பிடித்துள்ளார். இதில் எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். உடனே அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே செல்லத்துரை பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்