மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

தேவதானப்பட்டியில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலியானார்

Update: 2022-08-14 16:07 GMT

தேவதானப்பட்டி மேட்டு வளவு தெருவை சேர்ந்தவர் சிங்காரவடிவேல் (வயது 48). சென்ட்ரிங் தொழிலாளி. நேற்று இவர், அந்த பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டில் சென்ட்ரிங் வேலை செய்து கொண்டிருந்தார். கம்பிைய வளைப்பதற்காக தூக்கினார். அப்போது மேலே சென்ற மின்வயர் மீது கம்பி பட்டது.

இதில் கம்பி வழியாக சிங்காரவடிவேல் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். இதையடுத்து படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தேவதானப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்