தடுப்புச்சுவரில் மோட்டார்சைக்கிள் மோதி தொழிலாளி சாவு

தேசூர் அருகே தடுப்புச்சுவரில் மோட்டார்சைக்கிள் மோதி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

Update: 2023-06-06 10:53 GMT

சேத்துப்பட்டு

திருவண்ணாமலை மாவட்டம் தேசூர் அருகே பந்தமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ரங்கநாதன் (வயது 44), கூலி தொழிலாளி.

இவர் குண்ணகம்பூண்டி கிராமம் அருகே உள்ள கணேசாபுரத்தில் கூலி வேலையை முடித்துக் கொண்டு மோட்டார்ைசக்கிளில் பந்தமங்கலம் கிராமத்திற்கு வந்து கொண்டிருந்தார்.

தேசூர்- தெள்ளார் கூட்ரோடு அருகே வந்தபோது சாலையில் உள்ள தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் திடீரென மோதியது.

இதில் அவர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த தேசூர் போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்