கொசுவர்த்தி சுருள் தீப்பிடித்து தொழிலாளி சாவு
ராமநாதபுரத்தில் கொசுவர்த்தி சுருள் தீப்பிடித்து தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் பசும்பொன் நகர் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 35). டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. மனைவியை பிரிந்து வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு தூங்க சென்றவர் கொசுவர்த்தி சுருள் வாங்கி பற்ற வைத்துள்ளார். நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக கொசுவர்த்தி சுருள் விழுந்து அவர் படுத்திருந்த பாயில் தீப்பற்றியது. இதில் ஆறுமுகம் மீது தீ பரவியது. இதில் படுகாயம் அடைந்த அவர் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று பரிதாபமாக இறந்தார். இது குறித்து ராமநாதபுரம் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.