காவலூரில் கிணற்றில் விழுந்த தொழிலாளி பலி
காவலூரில் கிணற்றில் விழுந்த தொழிலாளி பலியானார்
வாணியம்பாடி
காவலூரில் கிணற்றில் விழுந்த தொழிலாளி பலியானார்
வாணியம்பாடி - ஜீவா நகர் பகுதியை சேர்ந்தவர் மணி (வயது 32), கட்டிட தொழிலாளி. இவர் இரண்டு நாட்களுக்கு முன்பு கிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள அக்காள் லட்சுமி வீட்டிற்கு சென்று அந்தப்பகுதியில் கட்டிடப் பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்தவர் சிறிது நேரம் கழித்து வெளியில் சென்று உள்ளார்.
பின்னர் வீடு திரும்பவில்லை. நேற்று காலையில் அந்தப்பகுதியில் தேடியபோது அங்குள்ள ஒரு கிணற்றில் தவறி விழுந்து இறந்து கிடந்துள்ளார்.
இது குறித்து காவலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.