டிராக்டரில் இருந்து கீழே விழுந்து தொழிலாளி பலி

நன்னிலம் அருகே டிராக்டரில் இருந்து கீழே விழுந்து தொழிலாளி பலியானார்.

Update: 2022-09-16 18:45 GMT

நன்னிலம்:

நன்னிலம் அருகே வெள்ளை அதம்பார் பகுதியை சேர்ந்தவர் கண்ணன்(வயது33). விவசாய கூலி தொழிலாளி. இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று அப்பகுதியை சேர்ந்த சிங்காரவேல்(58) என்பவர் டிராக்டர் ஓட்டிக்கொண்டு சென்றுள்ளார். கண்ணன் டிராக்டரில் அமர்ந்து சென்றுள்ளார். அப்போது கம்மங்குடி அருகே சென்றபோது கண்ணன் நிலைதடுமாறி டிராக்டரில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.இதுகுறித்து தகவல் அறிந்த நன்னிலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கண்ணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து டிராக்டர் டிரைவர் சிங்காரவேலை கைது செய்தனர். திருமணமாகி 6 மாதத்தில் டிராக்டரில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்