குளச்சலில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு

குளச்சலில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி இறந்தார்.

Update: 2022-12-11 19:05 GMT

குளச்சல்:

குளச்சல் ஏசுதாஸ் காலனியை சேர்ந்தவர் ஆன்றோ வினி (வயது 47), தொழிலாளி. இவர் விசைப்படகுகளுக்கு டீசல் நிரப்பும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு குயின் ஜெமி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். சம்பவத்தன்று இரவு ஆன்றோ வினி மோட்டார் சைக்கிளில் குளச்சல் துறைமுக பகுதிக்கு சென்று கொண்டிருந்தார். மேற்கு அலை தடுப்பு சுவர் சாலையில் சென்றபோது திடீரென மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று ஆன்றோ வினி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்