மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்த தொழிலாளி பலி
மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்த தொழிலாளி பலி
அய்யம்பேட்டை,
அய்யம்பேட்டை அருகே சூலமங்கலம் இந்திரா காலனியை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் கார்த்திகேயன் (வயது30). கூலித்தொழிலாளி. நேற்றுமுன்தினம் இரவு இவர் தஞ்சை அருகே பூண்டி கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு மீண்டும் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது தஞ்சை - விக்ரவாண்டி புறவழிச்சாலையில் வேம்பக்குடி என்ற இடத்தில் வந்த போது மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். இதில் கார்த்திக்கேயன் தலை அங்கிருந்த தடுப்பு சுவரில் மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த அய்யம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கார்த்திக்கேயன் உடலை கைப்பற்றி அய்யம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.